மஞ்சளின்(turmeric) மருத்துவ குணங்கள்:
மஞ்சள்(turmeric) ஒரு மங்களகரமான மருந்தாகும் என்பதில் ஐயமில்லை. இதை சமையலுக்கு மட்டுமே என்று ஒதுக்கிவிடமுடியாது. இதன் மருத்துவப் பயன்கள் ஏராளம். இதை வெளிப் பூச்சிக்கு மட்டும் என்று ஒதுக்கிவிட முடியாது. பல்வேறு நோய்களுக்கு மஞ்சள் ஒரு அருமருந்து.
நம் பண்டைய இந்திய மரபுவழி மக்களின் வாழ்க்கையின் ஒரு அம்சம் மஞ்சள் என்றால் அது மிகையாகாது. வீட்டு விஷேசங்கள் எதுவென்றாலும் மஞ்சளின் ஒன்றும் நடவாது. மஞ்சள் அனைத்து நோய்களையும் நீக்கி வல்ல ஒரு மருந்தாகும். மஞ்சளை தனியாகவும். பிற மூலிகைகளுடன் சேர்த்து மருந்தாகவும் பயன்படுத்தலாம். மஞ்சளின் மருத்துவ குணங்களை இனி, தெளிவாய் அறிவோம்.
அக்கிப்புண் தீர
மஞ்சளை(turmeric) தேங்காய் எண்ணெய்யில் குழைத்து, அக்கிப்புண்ணில் பூச, அந்நியன் விரைவில் குணமாகும்.
மஞ்சளுடன் சிறிது சிறுபருப்பு சேர்த்தைத்து பூச அக்கிப்புண் குணமாகும்.
இந்த மஞ்சளுடன் சிறிது அம்மான் பச்சரிசி இலையை சேர்த்தரைத்து பூச அக்கிப்புண் குணமாகும்.
மஞ்சளுடன் சிறிது குங்கிலியத்தை சேர்த்தரைத்து பூச அக்கிப்புண் குணமாகும்.
கடுக்காய்
துத்தி
வேப்பிலை
வெள்ளைமிளகு
மஞ்சள்
இவையனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து தூள் செய்து காலை-மாலை என இரு வேளைகளிலும் உகிராம் அளவில் பாலுடன் சாப்பிட்டு வர அக்கிப்புண் குணமாகும்.
அசீரணம் குணமாக மஞ்சள்(turmeric)
சூடான வெந்நீரில் மூன்று உப்புக்கல், இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து சாப்பிட அசீரணம் குணமாகும்.
சூடான பாலில் சிறிது மிளகுத்தூள், இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட அசீரணம் குணமாகும்.
ஓமம் - 50கிராம்
சுக்கு - 50கிராம்
மிளகு - 50கிராம்
திப்பிலி - 50கிராம்
கருஞ்சீரகம் - 50கிராம்
வெந்தயம் - 50கிராம்
கடுக்காய் - 50கிராம்
சீரகம் - 50கிராம்
பெருஞ்சீரகம் - 50கிராம்
மஞ்சள் - 50கிராம்
இவையனைத்தையும் ஒன்று சேர்த்து தூளாக்கிக் கொள்ளவும். இதில் காலை - இரவு மூன்று கிராம் அளவில் வெந்நீர் சாப்பிட்டு வர அசீரண நோய்கள் குணமாகும்.
வெற்றிலையில் மூன்று உப்புக்கல், இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள் வைத்து, சாப்பிட்டு வெந்நீர் அருந்த அசீரணம் விலகும்.
சிறிது கிராம் புத்தூளுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள்துள் சேர்த்துச் சாப்பிட அசீரணம் விலகும்.
அசீரண பேதி குணமாக மஞ்சள்(turmeric)
வெந்தயம் - 25 கிராம்
ஓமம் - 25 கிராம்
கசகசா - 25 கிராம்
தென்னம்பூ - 25 கிராம்
மஞ்சள் - 25 கிராம்
இவையனைத்தையும் தூளாக்கி, வைத்துக் கொள்ளவும். இதில் 3 கிராம் அளவு எடுத்து, கெட்டித்தயிரில் கலந்துண்ண அசீரணத்தால் உண்டாகும் பேதி குணமாகும்.
வெந்தயம், மஞ்சள், மாந்துளிர் மூன்றையும் சம அளவு எடுத்தரைத்து தயிரில் கலந்து சாப்பிட அசீரண பேதி நிற்கும்.
கசகசா, சுண்டைக்காய், மஞ்சள் மூன்றையும் சம அளவில் எடுத்து வறுத்து சாப்பிட அசீரண பேதி நிற்கும்.
மாதுளை ஓடு, வில்ல ஓடு, மஞ்சள் மூன்றையும் சம அளவில் எடுத்து தூள்செய்து சாப்பிட அசீரண பேதி குணமாகும்.
பாக்கு, மஞ்சள், சிறிது உப்பு மூன்றையும் தூள் செய்து தயிரில் சாப்பிட அசீரண பேதி நிற்கும்.
அடிப்பட்ட வீக்கம், வலி குணமாக
மஞ்சளை(turmeric) குழப்பி சூடு செய்து அடிப்பட்ட வீக்கத்தின் மீது பற்றுப்போட வீக்கம் கரையும்.
மஞ்சளுடன் புளிய இலையை சேர்த்தரைத்து பற்றுப்போட வீக்கம் குணமாகும்.
மஞ்சளுடன் வாதநாராயண இலையை சேர்த்தரைத்து பற்றுப்போட வீக்கம் கரையும்.
பப்பாளி இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து வீக்கத்தின் மீது பற்றுப்போட வீக்கம் கரையும்.
மஞ்சளை தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரில் கரிய பள்ளத்தை இட்டு உருக்கி, வீக்கத்தின் மீது பற்றுப்போட, வீக்கம் உடனே கரையும்.
மஞ்சளுடன் அதிமதுரம் சேர்த்தரைத்து வீக்கங்களின் மீது பற்றுப்போட வீக்கம் கரையும்.
இந்த மஞ்சளுடன் சிறிது உளுந்து, பச்சரிசி சேர்த்தரைத்துப் பற்றுப்போட வீக்கம் கரையும்.
மஞ்சளுடன் கோதுமை மாவு, ஓமத்தூள் இரண்டையும் கலந்து பற்றுப்போட வீக்கம் கரையும்.
மஞ்சள், சுக்கு, பனைவெல்லம் இவைகளை தேவையான அளவில் எடுத்து வைத்துக்கொள்ளவும் இதில் 10 கிராம் அளவில் காப்பிட அடிப்பட்ட வீக்கம் மறையும் வலி நீங்கும்.
மஞ்சள், தனியா விதை (கொத்தமல்லி) இரண்டையும் கசாயம் செய்து சாப்பிட வீக்கம் கரையும்.
அதி தூலம் தீர (Dropsy)
கிருமி கோளாறுகளினாலோ, முறையற்ற உணவு முறைகளினாலோ, அல்லது எண்ணெய் பொருள்களை அதிகம் உண்பதினாலோ, புகைபிடித்தல், போதை தரும் பீர், பிராந்தி, வைன் வகைகளை அதிகம் உபயோகிப்பதினாலோ, உடல் உறுப்புகளில் நீரசுரந்து ஸ்தூல நோய் (Drospy) உண்டாகிறது.
ஸ்தூல நோயைக் குணப்படுத்துவதில் மஞ்சளுக்கும் ஓர் இடம் உண்டு.
கீழா நெல்லி இலை கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் சிறிது சீரகம், ஐந்து சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தரைத்து பசும்பாலில் சாப்பிட, கல்லீரலில் நீர் சுரந்து ஸ்தூல நோயை குணமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து சூப்பராக செய்து சாப்பிட ஸ்தூல நோய் குணமாகும்.
திரிபலா சூரணத்துடன் (5 கிராம்) 100 மி.லி. கிராம் ( 2 சிட்டிகை) அயச்செந்தூரம், 5 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தேனுடன் சாப்பிட ஸ்தூல நோய் குணமாகும்.
அம்மான் பச்சரிசி - 1 கைப்பிடி அளவு
அயச்செந்தூரம் - 100 மி.லி. கிராம்
மஞ்சள் தூள் - 5 சிட்டிகை
இவைகளை அரைத்து பாலில் உட்கொள்ள ஸ்தூல நோய் குணமாகும்.
கரிசலாங்கண்ணி கீரையுடன் 2 சிட்டிகை அன்னபேதி செந்தூரத்துடன் 5 சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்தரைத்து பாலில் தொடர்ந்து சாப்பிட்டு வர ஸ்தூல நோய் குணமாகும்.
அதிவியர்வை குணமாக
ஆவாரம் பூவை சுத்தம் செய்து அத்துடன் சிறுபருப்பு, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து, கடைந்து சாப்பிட்டு வர அதிவியர்வை குணமாகும்.
ரோஜாப்பூவுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தொடர்ந்து சாப்பிட்டுவர அதிவியர்வை குணமாகும்.
செம்பருத்திப்பூவுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து சாப்பிட்டுவர அதிவியர்வை குணமாகும்.
ஆவாரம்பூ -¼ கிலோ
செம்பருத்திப்பூ - ¼ கிலோ
ரோஜாப்பூ - ¼ கிலோ
கடுக்காய் - ¼ கிலோ
வேப்பிலை - ¼ கிலோ
மஞ்சள் - ¼ கிலோ
கஸ்தூரி மஞ்சள் - ¼ கிலோ
கிச்சிலிக்கிழங்கு- ¼ கிலோ
சந்தனம் - 100 கிராம்
வெட்டிவேர் - ¼ கிலோ
சிறுபருப்பு - 2 கிலோ
இவையனைத்தையும் ஒன்றுகலந்து தூளாக்கிக் கொள்ளவும். இதில் தேவையான அளவு சூடான பாலில் கலந்து குளித்துவர, உடம்பில் காணும் அதி வியர்வை குணமாகும்.
அறுகம்புல்லை மஞ்சள் சேர்த்தரைத்து குளித்து வர அதி வியர்வை குணமாகும்.
அம்மை சுரம் தீர
வேப்பிலைத்துளிர் 5 எண்ணிக்கையுடன், மிளகு-3 மஞ்சள் தூள், 5 சிட்டிகை சேர்த்தரைத்து பாலுடன் சாப்பிட அம்மை சுரம்தீரும்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து, அம்மையில் பூச அம்மையில் காணும் வீக்கம் வடியும்.
அவுரி இலையுடன், மிளகு, மஞ்சள் சேர்த்தரைத்து 10 கிராம் அளவில் சாப்பிட அம்மை சுரம், அம்மை நோய் தீரும்.
இளநீரில் சிறிது மஞ்சள் சேர்த்து பருகிவர அம்மை நோய் தீரும்.
மஞ்சள்(turmeric) நீரை பருகிட அம்மை நோய் தீரும்.
அரையாப்புக்கட்டிகள் தீர
துத்தி இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து கட்டிகள் மீது பற்றுப்போட அரையாப்புக் கட்டிகள் தீரும்.
முடக்கத்தான் இலையுடன் மஞ்சள் விளக்கெண்ணெய் சேர்த்தரைத்து பற்றுப்போட அரையாப்புக் கட்டிகள் தீரும்.
அகத்திப்பூ, மஞ்சள், உளுந்து மூன்றையும் விழுந்தார் அரைத்துப் பற்றுப்போட அரையாப்புக்கட்டிகள் கரையும்.
ஆமணக்கு விதைப்பருப்பு, மஞ்சள் இரண்டையும் சேர்த்தரைத்துப் பற்றுப்போட அரையாப்புக்கட்டிகள் கரையும்.
வெட்பாலை இலையுடன், மஞ்சள் சேர்த்தரைத்து பற்றுப்போட அரையாப்புக் கட்டிகள் கரையும்.
சிறியாநங்கை இலையுடன், 10 சிட்டிகை (½ கிராம்) மஞ்சள் தூள் சேர்தத்ரைத்து உள்ளுக்கு சாப்பிட கட்டிகளால் உண்டாக்கும் வலி நீங்கும்.
ஆடுதின்னாப்பாளை இலையை மஞ்சள் சேர்த்தரைத்து கட்டிகள் பற்றுப்போட குணமாகும்.
அரையாப்புக் கட்டிகளால் உண்டாகும். சுரம் நீங்க, வேப்பிலை, சிறிய நங்கை வெள்ளருகு மூன்றையும் சம அளவில் எடுத்து இத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்தரைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட அரையாப்புக் கட்டிகள் கரையும்.
குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளில் வைத்துக்கட்ட கட்டிகள் கரையும்.
வேலிப்பருத்தி இலையை மஞ்சள் சேர்த்தரைத்து பற்றுப்போட அரையாப்புக் கட்டிகள் கரையும்.
அரையாப்புக்கட்டிகள்:
அரையாப்புக்கடிகள் - என்பது தொடை இடுக்குகள் மற்றும் தோற்பட்டைக்குக் கீழ் அக்குள் பகுதியில் உண்டாகும் கட்டிகள் குறிப்பதாகும். இதை 'நெற்றிக்கட்டி' என்றும் அழைப்பதுண்டு.
அனைத்து சுரங்களுக்கும் மஞ்சளே மருந்து
நிலவேம்பு - 10 கிராம்
கோரைக்கிழங்கு - 10 கிராம்
கடுகு ராகிணி - 10 கிராம்
பற்பாடகம் - 10 கிராம்
சீந்தில்கொடி - 10 கிராம்
வேப்பம்பட்டை - 10 கிராம்
மஞ்சள் - 10 கிராம்
இவைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒன்றிரண்டாய் பொடித்துப்போட்டு, நன்கு கொதிக்கவைத்து பாதியாய் சுண்டச்செய்து. 4 மணி நேரத்திற்கு ஒரு முறை 200 மி.லி. அளவில் சாப்பிட்டு வர சகல சுரங்களும் தீரும்.
மஞ்சள் - 25 கிராம்
தூதுவளைப்பூ - 25 கிராம்
பூனைக்காஞ்சொறிவேர் - 25 கிராம்
சிந்தல் கொடி -25 கிராம்
பற்பாடகம் -25 கிராம்
சிற்றாமுட்டிவேர் - 10 கிராம்
பேராமுட்டி வேர் - 10 கிராம்
கடுக்காய் தோல் - 10 கிராம்
இவை ஒன்றிரண்டாக இடித்து, இரண்டு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகக் சுண்டச் செய்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை 200 மி.லி. அளவில் சாப்பிட எத்தனை நாட்பட்ட காய்ச்சலும் தீரும்.
மஞ்சள்(turmeric), அதிமதுரம், சோம்பு, உலர்திராட்சை, சுக்கு, வில்வவனம் இவைகளை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து பொடித்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாய் சுண்டல் செய்து சாப்பிட, பித்தம் அதகரித்து உண்டாகும் சகல காய்சச்ல்களும் தீரும்.
மஞ்சள் - 10 கிராம்
கொட்டைக்கரந்தைப்பூ -10 கிராம்
கழற்சிப்பருப்பு -10 கிராம்
துளசிவேர் -10 கிராம்
இவைகளை ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாய் சுண்ட வைத்து சாப்பிட வாதநோய், மற்றும் கடுமையான மூட்டு வலியுடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.
மஞ்சள், பற்பாகடம், கோரைக்கிழங்கு, குருவாயூர், வெட்டிவேர், சுக்கு வகைக்கு 10 கிராம் எடுத்து பொடித்து ஒரு லிட்டர் தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து பாதியாய் சுண்டச் செய்து சாப்பிட கபம் அதிகரித்து உண்டாகும் காய்ச்சல் தணியும்.
மூலிகைச் சரக்குகளை கசாயம் செய்யும் பொழுது, பாதியாக சுண்டச் செய்தல் இயல்பான பலனை தரும்.
மேலும் காய்ச்சல்களுக்கு கையுறை மருந்துகளை தேர்ந்தெடுக்கும்போது நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கசாயம் பருக வேண்டும.
Post a Comment