உப்பின்(salt) மருத்துவப் பயன்கள்
நாம் அனைவரும் உணவில் உப்பை(salt) ருசியிக்காக மட்டுமே சேர்த்து கொள்வதாக எண்ணி தினசரி உணவில் எடுத்து கொள்கிறோம் ஆனால் அவற்றில் மறைந்திருக்கும் மருத்துவகுணத்தை என்னில் அடங்காது என்பதை இதுவரை அறிவில்லை என்றால் வாருங்கள் இப்பதிவில் அத்தகைய பெரும் பொக்கிஷத்தை பற்றி விரிவாக காணலாம்.
உப்பை(salt) நீர் விட்டரைத்து விஷக்கடியின் மீது பற்றுப்போட்டு, அவ்விடத்தில் அனல் காண்பிக்க விஷம் தணியும்.
உப்பை நீரில் கரைத்து அத்தெளிநீரை கண்ணில் சில துளிகள் விட தேள்கடி விஷம் நீங்கும்.
ஓரு தேக்கரண்டி உப்பு தண்ணீரில் கரைத்து வாய்க் கைப்பற்றிக் தொண்டைக்கட்டு, தொண்டை வீக்கம், பல் ஈரல் வீக்கம் முதலியன நீங்கும்.
50 கிராம் உப்பை எடுத்து துணியில் முடிந்து, கொதிக்கும் எண்ணெய்யில் தேய்க்க தாங்கக்கூடிய சூட்டில் ஒற்றிடமிட வீக்கமும் அதனால் உண்டாகும் வேதனையும் தீரும்.
உப்பையும் புளியையும் சம அளவு நீரில் கரைத்து கொதிக்க வைத்து, குழம்பிப் பதத்தில் எடுத்து, இளஞ்சூடான அடிபட்ட வீக்கம், சுளுக்கு இவைகளுக்கு பற்றி இரத்தக்கட்டு கரைத்து வேதனை நீங்கும்.
உப்புக் கரைத்த நீரை ஆசனக் குழாய் வழியே பீச்ச குடலிலுள்ள கீரிப்பூச்சிகள் வெளிப்படும்.
உப்பை அதிக அளவில் கொடுத்தால் வாந்தியை உண்டாக்கும்.
உப்பு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பிணிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
உப்பு இரைப்பையில் செரிமான நீரை அதிகப்படுத்தும் தன்மை கொண்டதால் செரியாமை நோயினால் அவதிப் படுபவர்கள் உப்பை கவனமாகக் கையாள வேண்டும்.
அதிக உடற்பருமன் (obesity), சோபை, தாகம், சருமநோய் இவைகளில் உப்பை ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
கடலுப்பில் அயோடின் தன்மை காணப்படுவதால் நன்மை தைராய்டு நோயிலிருந்து காக்கும் வல்லமை கொண்டிருக்கிறது.
சிறிது அளவில் எடுத்துக்கொள்ளும் உப்பினால் உமிழ்நீர், அதிகம் உற்பத்தியாகி, இரைப்பை செரிமான நீரை அதிகப்படுத்தி, பசியை நன்கு தூண்டி, செரிமான சக்தியை வளர்க்கும்.
உப்பு தாக்கத்தை ஏற்படுத்தி உடலில் நீரின் தன்மையை ஏற்கச் செய்யும் உப்பு சளி, கோழை இவைகளின் உற்பத்தியைத் தடுக்கும்.
உப்பின்(salt) பொதுகுணம்:
உப்பினால்(salt) பித்தவாதம், கண்டுக்கலை, கபம், கல்லீரல் நோய் எண்வகைக் குன்மம் முதலியன நீங்கும்.
உடம்பிற்கு வேண்டிய பொருள்களில் உப்பும் ஒன்றாகும், இரத்தச் சுழற்சி முறையே நடைபெற உப்பின் பங்கு உன்னதமானது.
நமது உடம்பிலிருந்து வெளிப்படும் வியர்வை, கண்ணீர், சிறுநீர் இவைகளில் வழியாய் உடம்பிலிருந்து உப்பு வெளிப்படுகின்றது.
உப்பின்(salt) குணம்:
உப்பிற்கு(salt) மனமில்லை. இது கரிப்புச் சுவையுடன், எளிதில் நீரில் கரையும் தன்மையுடனும் இருக்கும். உப்பு மதுபானத்தில் கரையானது
உப்பின்(salt)செய்வகை:
பசித்தூண்டி
மலம் போக்கி
வாந்தி உண்டாக்கி
புழுக்கொல்லி
முறை வெப்பகற்றி
கறிஉப்பு
மருத்துவ பயன்கள்:
பேதி செய்விக்க மருந்து:
சுக்கு - 5 கிராம்
கொட்டைப்பாக்கு - 5 கிராம்
இந்துப்பு - 5 கிராம்
கடுக்காய் தோல் - 5 கிராம்
இவைகளை ஒன்றாக்கி தூள் செய்து கொள்ளவும். இதில் 10 கிராம் அளவு பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட நன்கு பேதி உண்டாகும். இதனால் உடல் சுத்தி உண்டாக்கி அனைத்து நோய்களின் வளர்ச்சியும் மட்டுப்படும்.
குமட்டி உப்பு:
பேய்க்குமட்டிச்சாறு -1 லிட்டர்
கறிஉப்பு - அரை படி
இரண்டையும் அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். சாறுசுண்டி கடைசியில் உப்பாக(salt) மாறும். இதை நன்கு தூள் செய்து காற்றுப் புகாத கண்ணாடிக் குடுவையில் அடைத்து வைக்கவும்.
இதில் அரை கிராம் அளவு அதிகாலையில் சாப்பிட நன்கு பேதியாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிடலாம். வயிற்றில் உள்ள கட்டிகள், வயிற்றுப்புண், மாதவிடாயில் உண்டாகும் வலி ஆகியன தீரும்.
கருப்பைக் கட்டி கரைய :
தான்றிக்காய் தோல் - 100 கிராம்
கடுக்காய் தோல் - 100 கிராம்
சுக்கு - 100 கிராம்
மிளகு - 100 கிராம்
திப்பிலி - 100 கிராம்
குமட்டி உப்பு - 100 கிராம்
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை தூள் செய்து, குமட்டி உப்பைக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவில் அதிகாலையில் இஷ்ட தெய்வ வழிபாடுடன் பெண்கள் சாப்பிட்டு வர கருக்குழி சத்தியாகிரக, குழந்தைப்பேறு உண்டாகும். கருப்பையில் உண்டாகும் கட்டிகள் முழுவதும் கரையும் .
ஆறுமுகம் செந்தூரம்:
இரசம், வெங்காயம், காந்தம், இந்துப்பு, கந்தகம், இரும்பு இவைகளை உட்பொருள் கொண்ட சித்தர்கள் அருளிய செந்தூரம், அனைத்து நோய்களுக்கும் இது ஒன்றே மருந்தாகும்.
மருத்துவர் துணைக் கொண்டு மேற்கொள்ள அரை வாதம், விரை வாதம், சூலை நோய்கள், மூலம், எரிகுன்மம், வறட்சி, அனல், வெடிசூலை, மார்பு சூலை, சயம், அரை யாப்பு, மத நோய், அதிசாரம், மண்டையில், தொண்டை வலி, கண்டால் போன்ற நோய்கள் தீரும்.
அமுக்கராதி சூரணம்:
கண்டங்கத்திரி வேர் - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
நெல்லிக்காய் - 10 கிராம்
முள்ளிவேர் - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
தான்றிக்காய் - 10 கிராம்
சாதனை - 10 கிராம்
திப்பிலி மூலம் - 10 கிராம்
ஓமம் - 10 கிராம்
எவச்சரம் - 10 கிராம்
கொடிவேலி - 10 கிராம்
கடுக்காய் - 10 கிராம்
வளையலுப்பு - 10 கிராம்
கல்லுப்பு - 10 கிராம்
சீரகம் - 10 கிராம்
இந்துப்பு - 10 கிராம்
வெடியுப்பு - 10 கிராம்
கறுஞ்சீரகம் - 10 கிராம்
கறியுப்பு - 10 கிராம்
சத்திச்சாரம் - 10 கிராம்
அதுக்காக - 10 கிராம்
இவையனைத்தையும் ஒன்றாக்கி தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் இரண்டு கிராம் அளவு நெய் குழைத்துச் சாப்பிட்ட வாத, பித்த நோய்கள் அனைத்தும் தீரும்.
அண்டவாயு தீர மருந்து:
எருக்கம்பூ மூட்டு - 10 எண்ணிக்கை
எலுமிச்சை சாறு - 200 மி.லி.
உப்பு - 10 கிராம்
எருக்கம் பூ மேட்டுக்கடை சிவக்க வறுத்து பின்னர் எலுமிச்சம் சாற்றுடன் நன்கு வேகவைத்து குழம்பாக்கவும் பின்னர் உப்பை(salt) தூள் செய்து சேர்க்கவும் . இதில் இரண்டு கிராம் அளவில் காலைதில்க்ஷமட்டும் சாப்பிட்டு வரவும்.
சகல வாய்வுகளும் விலக ஒற்றடம்:
சதுரக்கள்ளி - ஒரு சாணி துண்டு
ஆமணக்கு முத்து - 2 கைப்பிடி
கறியுப்பு - 2 கைப்பிடி
வெள்ளைப்பூண்டு - 1 கைப்பிடி
முற்றியதேங்காய் - ஒரு மூடி
துருவல்
இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகச் சிதைத்து, இரண்டு பாகமாக்கவும்.
ஒரு பாகத்தை சட்டியிலிட்டு நன்கு வறுத்து, துணியில் கட்டி, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்கும். இது ஆறிப்போகுமுன் மற்றொரு பாகத்தையும் சூடு செய்து, மாறி மாறி ஒற்றடம் கொடுக்கும். இதுபோல் ஒரு மணி நேரம் வரை ஒற்றடம் தரலாம்.
வயிறு, தோள்பட்டை, முதுகு, கை, கால், மூட்டுகளில் உண்டாகும் வலி மற்றும் போன்ற நோய்களுக்கு அற்புதமான நிவாரணம் தருகிறது.
திமிர்வாதம் தீர தைலம்:
முருங்கை விதை - 20 கிராம்
சங்கின் உப்பு - 20 கிராம்
கல்லுப்பு - 20 கிராம்
சுக்கு - 20 கிராம்
எவச்சுரம் - 20 கிராம்
இவைகளை ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். புளிய இலையை தயிர் தெளிவு நீர் விட்டு அரைத்து ஒருபடி சாறெடுத்து. அதை நாலில் ஒன்றாகச் சுண்டகாய்ச்சி எடுத்துகொள்ளவும்.
முதலில் தூள் செய்து சரக்குகளையும், புளிய இலைச் சாற்றையும் இரண்டரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயாய் எரித்து தைல பதத்தில் இறக்கிவிடவும். இதை உடம்பில் தேய்க்க, திமிர்வாதம் மற்றும் பிற வாத நோய்கள் தீரும்.
பாவனக் கடுக்காய் சூரணம்:
கடுக்காய் தோல் - 1 லிட்டர்
காடித் தண்ணீர் - 2 லிட்டர்
எலுமிச்சைச்சாறு - 1 லிட்டர்
முதல் நாள் கடுக்காய் தோல் கட்டித் தண்ணீரில் போட்டு வைக்கவும். மறுநாள் எலுமிச்சைச்சாறு சேர்த்து வைக்கவும். மூன்றாம் நாள் இக்கலவையை வெய்யிலில் வைக்கவும். சாறுகள் சுண்டி கடுக்காய் நன்கு உயர்ந்ததும் எடுத்து கொள்ளவும்.
தலைவலி, சைனஸ் தீர:
ஓமம் - 100 கிராம்
பெருங்காயம் - 100 கிராம்
சுக்கு - 100 கிராம்
கசகசா - 50 கிராம்
இந்துப்பு - 50 கிராம்
துளசி இலை - 100 கிராம்
புழுங்கலரிசி - 100 கிராம்
இவைகளை தனித்தனியே வறுத்து ஒன்றாக்கி தூள் செய்து கொள்ளவும். இதில் வேளைக்கு இரண்டு கிராம் வீதம் காலை, மாலை சாப்பிட்டுவர தீரா தலைவலி, தும்மல், சைனஸ், மூக்கடைப்பு, ஆகியன தீரும்.
காசம் (T.B.) குன்மம் நீங்க:
இந்துப்பு - 50 கிராம்
யவச்சாரம் - 50 கிராம்
வெங்காரம் - 50 கிராம்
சவர்க்காரம் - 50 கிராம்
சுக்கு - 50 கிராம்
கண்டுபராங்கி - 50 கிராம்
செவ்வியம் - 50 கிராம்
திப்பிலிமூலம் - 50 கிராம்
யானைத்திப்பிலி - 50 கிராம்
வட்டத்திருப்பி - 50 கிராம்
ஓமம் - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
சிவப்பு சித்திரமூல - 300 கிராம்
வேர்ப்பட்டை
இவற்றை ஒன்றுபடக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் ஒரு கிராம் அளவில் தேனில் சாப்பிட்டு வர காச நோய், குன்ம நோய், கிராணி, மூலம், வாயுக்கோளாறுகள், பசியின்மை ஆகியன தீரும்.
காவிக்கல் சூரணம்:
காவிக்கல் - 40 கிராம்
சோடா உப்பு - 5 கிராம்
ஏலகிரி - 10 கிராம்
சரக்குகளை தனித்தனியாக தூள் செய்து ஒன்றாக்கிக் கொள்ளவும்.
பயன்கள்:
இதில் ¼ தேக்கரண்டி (1 கிராம்) அளவுநீர் அல்லது பேரில் சாப்பிட வயிற்றுவலி, வயிற்றுப்புண், செரிமான மேன்மை, சீதபேதி, பெண்களுக்கு உண்டாகும் அதிக உயிர்ப்பிக்க ஆகியன குணமாகும்.
இதில் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவு எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்துவர, வாய்ப் புண்கள் மற்றும் பற்கள் சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும்.
தயிர்சுண்டி சூரணம்:
இந்துப்பு - 10 கிராம்
வெங்காயம் - 10 கிராம்
வெடியுப்பு - 10 கிராம்
சோற்றுப்பு - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
புளித்த தயிர் - ½ கிலோ
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை சுத்தி செய்து எட்த்துக்கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிரை விட்டு அதில் சரக்குகள் அனைத்தையும் கலந்து வெய்யிலில் வைத்துவிடவும், தயிர் முழுவதும் வற்றியதும், சரக்குகள் நன்கு காய்ந்ததும் அரைத்து சூரணமாக்கிக் கொள்ளவும்.
பயன்கள்:
இதில் மூன்று சிட்டிகை நீர் அல்லது போரில் சாப்பிட வாயு வயிற்று வலி, கிருமி நோய்கள், செரிமானமின்மை, செரியாக்கழிச்சல் ஆகியன தீரும்.
கற்பூராதி சூரணம்:
பூங்கற்பூரம் - 10 கிராம்
கிச்சிலிக்கிழங்கு - 10 கிராம்
அன்னாச்சிப்பூ - 10 கிராம்
ஜாதிக்காய் - 10 கிராம்
ஜாதிப்பத்தரி - 10 கிராம்
சுக்கு - 20 கிராம்
மிளகு - 20 கிராம்
திப்பிலி - 20 கிராம்
கிராம்பு - 20 கிராம்
சசிறுநாகப்பூ - 20 கிராம்
சீனிச்சக்கரை - 300 கிராம்
சரக்குகளை சுத்தி செய்து 2 முதல் 10 வரை உள்ள சரக்குகளை ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். பின்னர் பூங்கற்பூரத்தையும் சீனிச்சக்கரையையும் தனித்தனியே தூள் செய்து ஏற்கனவே தூள் செய்து வைத்துள்ள சூரணத்துடன் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும்.
இதில் அரை கிராம் அளவில் காலை, மாலை உணவுக்குப் பின் தேனுடன் உட்கொள்ள சளி, இருமல், தொண்டையில் சதை, ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்கள் குணமாகும். பூங்கற்பூரம் என்பது உப்பின் ஒரு வகையாம்.
குன்ம குடோரி மெழுகு:
இந்துப்பு - 10 கிராம்
கல்லுப்பு - 10 கிராம்
சோற்றுப்பு - 10 கிராம்
வளையலுப்பு - 10 கிராம்
வெடியுப்பு - 10 கிராம்
பூநீறு - 10 கிராம்
வெங்காரம் - 10 கிராம்
நவச்சாரம் - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
ஓமம் - 50 கிராம்
கிராம்பு - 50 கிராம்
கோஷ்டம் - 50 கிராம்
மோடி - 50 கிராம்
பெருங்காயம் - 50 கிராம்
பூண்டு - ¼ கிலோ
தேன் - ¼ கிலோ
பனைவெல்லம் - ¼ கிலோ
முதலில் உப்புச்(salt) சரக்குகளை தூய்மை செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பூண்டை உரித்து வைத்துக் கொள்க. பூண்டு, தேன், பனைவெல்லம் நீங்கலாக அனைத்துச் சரக்குகளையும் தூள் செய்து கொள்ளவும். பின் பூண்டுப் பற்களை விழுதாக அரைத்து அத்துடன் சூரணத்தை கொஞ்சம் கொஞ்மாய் சேர்த்தரைத்து பதமான பின் பனை வெல்லம் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தரைக்கவும். பின்னர் தேனையும் விட்டு மெழுகு பதமாய் அரைக்கவும். பின்னர் தேனையும் விட்டு மெழுகு பதமாய் அரைக்கவும். இதுவே குன்ம குட்டி மெழுகு.
பயன்கள்:
குன்மம், பித்த வாயு, செரியாமை, சூதக, வாயுவினால் உண்டாகும் வலி, வாத நோய்கள் போன்ற பிணிகள் தீரும்.
கற்பூராதி தைலம்:
ஓமம் - 20 கிராம்
தேங்காய் எண்ணெய் - அரை கிலோ
பூங்கற்பூரம் - 50 கிராம்
முதலில் ஓமத்தை நீரில் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து சிறு தீயாய் எடுக்கவும். எண்ணெய் தைல பதம் வரும்போது பூங்கற்பூரத்தை தூள் செய்து சேர்க்கவும்.
பயன்கள்:
வாத நோய், சுளுக்கு இவைகளுக்கு மேற்பூச்சாக பூசலாம். மார்புச் சளி, இரைப்பு, இருமல் ஆகியவற்றுக்கு மார்பில் தடவி வரலாம்.
கடுமையான வலியில் இத்தைலத்தை தடவி வறுத்து கோதுமைத் தவிடை ஓற்றடம் கொடுக்க உடனடி நிவாரணம் பெறலாம்.
சடாமாஞ்சில் தைலம்:
சடா மாஞ்சில் - 20 கிராம்
கப்பு மஞ்சள் - 10 கிராம்
ஓமம் - 5 கிராம்
நவச்சாரம் - 5 கிராம்
பூங்கற்பூரம் - 10 கிராம்
நல்லெண்ணெய் - 150 கிராம்
முதலில் சடாமாஞ்சில், ஓமம் இரண்டையும் ஒன்றிரண்டாய் இடித்து 150 மில்லி லிட்டர் நீரில் சேர்த்துச் கொதிக்க வைத்து நாலில் ஒன்றாக சுண்டச் செய்து நவச்சாரத்தை பொடித்து கலக்கவும்.
பின்னர் நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சிறு தீயாய் எரிக்கவும். தைலப்பதத்தில் இறக்கி வடித்து இத்துடன் பூங்கற்பூரத்தை சேர்த்துக்கொள்ளவும்.
பயன்கள்:
சுளுக்கு, இரத்தக்கட்டு, வாதநோய்கள் மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் தருகிறது.
நீர் கோவை மாத்திரை :
கப்பு மஞ்சள் - 20 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 20 கிராம்
வெங்காரம் - 10 கிராம்
சாம்பிராணி - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
சாதிக்காய் - 10 கிராம்
ஓமம் - 5 கிராம்
கிராம்பு - 10 கிராம்
கற்பூரம் - 5 கிராம்
இவையனைத்தையும் கல்வத்திலிட்டு எலுமிச்சை சாறில் 6 மணி நேரம் அரைத்து பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி உலர்த்திக் கொள்ள வேண்டும்.
பயன்கள்:
வெளி உபயோகத்திற்கு ஏற்ற மருந்து. தலைவலி, ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவற்றிக்கு இம் மாத்திரையை தூள் செய்து தாய்ப்பால் (அ) பசும் பாலில் கலந்து நெற்றியில் பத்துப்போட மேற்கண்ட பிணிகள் தீரும்.
Post a Comment