Heart Healthy food in Tamil - இதயதிற்க்கு இயற்கை உணவு

இதயம் காக்கும் இயற்கை உணவுகள்


  மானுட உடலில் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்புகளில் முன்னோடியாய் இருப்பதாய் இதயத்தை குறிப்பிடலாம். தாயின் கருப்பையிலேயே  இதயத்தின் வேலை ஆரம்பமாகி விடுகிறது. இரவு, பகல் பாராது இடைவிடாது மனிதனின் ஆயுள்காலம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருக்கும் இனிய தோழன் தான் இந்த இதயம். இந்த துடிப்பு நின்று விட்டால் நாடித்துடிப்பு ஏற்படவில்லை என்றால் வாழ்க்கை முடிந்து விட்டதால் அர்த்தம்.


Heart healthy food


  'நேற்று நானும் அவரும் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தோம் மதிய உணவு ஒன்றாய் சாப்பிட்டோம் லேசாய் நெஞ்சு வலிப்பதாக சொன்னாள் மருத்துவமனை செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது'.


   இதுபோன்ற நெஞ்சை உலுக்கும் விளைவுகளை நாம் கண்கூடாகக் கண்டு கேட்டும் வருகிறோம். இப்போது இதயம் காக்கும் இயற்கை உணவுகளைப் பற்றி அறிவோம்.


இதயத்தின் செயல்பாடுகள் என்ன?


   இதயம் என்பது உடலின் அனைத்து உறுப்புகளும் ஒழுங்கே இயங்க உதவிபுரியும் உற்ற நண்பன் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ரத்தத்தை ரத்த நாளங்கள் வழியாக தொடர்ச்சியாக இறைந்து விடும் ஒரு அற்புதக் கருவி.


  ஒவ்வொரு வரின் இறுகமூடியை கையளவே கொண்ட இதயத்தில்


  1.  இதய  வெளியுறை(pericardium)

  2. இதய மேல் உறை(epicardium)

  3. இதயத்தசை(myocardium) இதய உள்ளுரை ஆகிய பகுதிகளைக் கொண்டது


    மனிதன் உயிர் வாழ்வதற்கு தமனிகளிலும், சிறைகளிலும் இரத்தச் சுழற்சி இருந்து கொண்டே இருக்க வேண்டும். இரத்தச் சுழற்சி  செய்யும் முக்கிய பணிகளை இதயமும் ரத்தக் குழாய்களும் முறையே செய்து வருகின்றன. 


  நுரையீரல்களில் இருந்து பிராண வாயுவையும், ஜீரண உறுப்புகளில் இருந்து சத்துப் பொருள்களையும் உடலில் எல்லா உறுப்புகளுக்கும். எல்லா திசுக்களுக்கும் ரத்த சுழற்சியின் மூலம் கொண்டு செல்வதுதான் இதயத்தின் முக்கிய பணியாகும்.


இதய நோய் வகைகள் என்ன?


  1. இதய நோயில் ஒரு வகை பிறப்பிலேயே உண்டாகிறது(congenital Heart diseases)

  2. முடக்கு வாத நோயினால் உண்டாகும் இதய நோய்கள் (rheumatic heart diseases)

  3.  இதய தசைகளில் உண்டாகும் நோய்கள் (cardiomyopathies)

  4. இதய வெலி உள்ளுரை நோய்கள் (pericardial diseases)

  5. ரத்தத்தில் கொழுப்பு மிகுதலால்  உண்டாகும் இதய நோய்கள் (hyperlipideamias)


      இவ்வாறு பல்வேறு பரிமாணங்களை இதயநோய் கொண்டுள்ளது. இன் நோயின் இறுதிக் கட்டம் மாரடைப்பு என்னும் கொடுமையான நிகழ்வு நோயாளிக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.


மாரடைப்பு உண்டாக காரணங்கள் தான் என்ன?


  1. சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக் கொதிப்பு மாரடைப்பிற்கு காரணமாகலாம்

  2. ரத்தத்தில் கொழுப்பு மிகுதல் மற்றும் ரத்த நாளச் சுவர்களில் கொழுப்பு படிவதாலும் மாரடைப்பு உண்டாகலாம்

  3. மது புகை புகையிலை இவையுன் மாரடைப்புக்கு முன்னுரையாய் இருக்கலாம்

  4. முதுமை மற்றும் பாரம்பரிய மரபு தன்மையும் ஒரு காரணமாய் இருக்கலாம்

  5. மன உளைச்சல் நிறைந்த வாழ்க்கை சூழல் மாரடைப்பை வரவேற்கலாம்

  6. அதிக உடற்பருமன், ஊளைச்சலையும், பெருந் தினியும் மாரடைப்புக்கு முக்கியக் காரணம் ஆகலாம்.


மாரடைப்பு வராமல் தடுக்க இயற்கை மருத்துவத்தால் முடியுமா?


    கண்டிப்பாய் முடியும் இயற்கை மருத்துவம் என்பது மருத்துவ முறை என்பதைவிட, அதை ஒரு வாழ்வியல் நெறி என்றே சொல்லலாம். இங்கே உணவுதான் மருந்தாக பயன்படுகிறது.


  உடலோம்பல் செய்யும் உணவுகள் அனைத்தும் உயிரை பேணுமே ஒழிய போகாது இதய நோய்களின் மூலம் தனி மனித ஒழுக்கம் இன்மை, உணவில், உடலில் கவனமின்மை, மெத்தனம் - இவற்றைச் சொல்லலாம்.


  பிறவிலேயே உண்டாகும் இதய நோய்களைத் தவிர பிற இதய நோய்கள் திடீரென உண்டாகி விடுவதில்லை. முதலில் பிற நோய்களால் உருவெடுத்து சார்பு நோய்கள் இதய நோய்களை உண்டாக்கி விடுகிறது.


   இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டு முறையாய் உணவை உண்டு தனி மனித ஒழுக்க முறைகளை கையாண்டால் கண்டிப்பாய் இதய நோய் குணமாகும்.


  இங்கே இதய நோயினை குணமாக்கும் வல்லமை பெற்ற சில உணவு முறைகளை வகைப்படுகின்றேன் இதை பழக்கப் படுத்திக் கொள்ளும் இதயங்கள் கண்டிப்பாய் வலிமை பெறும். ஐயமில்லை!


மாரடைப்பை தடுக்க தள்ள வேண்டிய உணவுகள்?


  1. வெண்ணெய், நெய், வனஸ்பதி தாவர எண்ணெய்கள், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் கூடவே கூடாது

  2. எண்ணெயில் வறுத்த உணவுகள், அசைவ உணவுகள், கடலை மாவு பதார்த்தங்கள் அறவே கூடாது.

  3. மதுபானங்கள், புகையிலை, சிகரெட் போன்ற போதை வஸ்துகளை தூக்கி எறிய வேண்டும்.

  4. முட்டை, உப்பு ஆகியவற்றை வெகுவாய் குறைக்க வேண்டும்

  5. அளவுக்கதிகமாய் டீ, காப்பி அருந்துதலை தவிர்த்தல் வேண்டும்

  6. உடலுறவில் அதிகம் வேகம்  காட்டுவது, உறவுக்காக ஊக்க மருந்துகள் எடுத்துக் கொள்வது அறவே கூடாது.


  இதயம் காக்கும் இயற்கை உணவுகள் கீழே வகைப்படுகின்றன


இதயம் காக்கும் ஆவாரம் பூ:


      'ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டது உண்டோ' என்ற பழமொழியில் மூலம் இதன் சிறப்பை உணரலாம். ஆவாரம்பூ துவர்ப்புச் சுவை மற்றும் மலமிளக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது. இதயத்தை வலுவாக்கும் தன்மை ஆவாரம் பூவுக்கு உண்டு.


ஆவாரம் பூ கூட்டு:


   புத்தம்புதிய ஆவாரம்பூ 100 கிராம் அளவில் எடுத்து, காம்பினை எடுத்து, சூடான நீரில் அரை மணிநேரம் ஊற போடுங்கள். பின்னர் அதனை லேசாக இறங்கி எடுத்து


தண்ணீர் - அரை லிட்டர்


சிறு பருப்பு - 200 கிராம்


   மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் தேவையான அளவு. இவற்றுடன் ஆவாரம் பூவையும் சேர்த்து கொதிக்க வைத்து, இறக்கி கீரை கடைவது போல் கரைந்து விடவும். இதனை உணவாக சாப்பிட உடலில் அதிகபடியான கொழுப்பு கரைகிறது. இரத்த குழாய்களில் உண்டாகும் வைரஸ் தொற்று நோய் சரியாகிறது. இதய வீக்கம் இதய வலி ஆகியன குணமாகிறது.


இதயம் வலுவாக ஆவாரை மூலிகை தேநீர்:


ஆவாரம்பூ - 100 கிராம்


ரோஜா பூ - 50 கிராம்


சுக்கு - 25 கிராம்


மிளகு - 10 கிராம்


ஏலக்காய் - 10 கிராம்


துளசி - 50 கிராம்


இவற்றை ஒன்றிரண்டாக இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு நீர் எடுத்து கொதிக்க வைத்து தேநீர் போல் தினசரி சாப்பிட்டு வர இதயம் வலுவாகும். உடல் பருமன் ஊளைச்சதை குறையும்.


இதய நோய் தீர செம்பருத்திப் பூ கசாயம்:


செம்பருத்திப் பூ - 10 எண்ணிக்கை


துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு


சுக்கு - 5 கிராம்


ஏலக்காய் - 5 கிராம்


    இவற்றை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி சாப்பிட, இதய நோய்கள் அனைத்தும் தீரும்


 1)     வாத நாராயணா இலை கைப்பிடி அளவு எடுத்து அதில் ஒரு பல் பூண்டு, சிறிது பெருங்காயம் சேர்த்து அரைத்து பட்டாணி அளவு 3 வேளை சாப்பிட முடக்கு வாத நோயினால் உண்டாகும் இதய நோய்கள்(rheumatic heart diseases) குணமாகும்.


 துளசி இலை - 100 கிராம்


வில்வம் - 100 கிராம்


சர்ப்பகந்தா - 100 கிராம்


அஸ்வகந்தா - 100 கிராம்


   இவற்றை ஒன்றாகக் கலந்து தூள் செய்து, இரண்டு கிராம் அளவில் தினசரி இருவேளை தேனில் சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் (blood pressure) மிகுதலால் உண்டாகும் இதய நோய்கள் குணமாகும்.



இதயம் வலு பெற வேப்பம்பூ துவையல்:


வேப்பம்பூ - 50 கிராம்


வெல்லம் - 30 கிராம்


வறுத்த பச்சரிசி - 10 கிராம்


காய்ந்த மிளகாய்-3 எண்ணிக்கை


பூண்டுப்பற்கள் -  3 எண்ணிக்கை


உப்பு புளி எண்ணிக்கை தேவையான அளவு


   முதலில் வேப்பம் பூவை சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் பிற சரக்குகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சிறந்த சுவையான உணவு. வைரஸ் தொற்று உண்டாகும் இதயநோய் தீரும். கொழுப்பு கரையும். இதய நோய் உள்ளவர்கள் நெல்லிக்காய், கடுக்காய், பிரண்டை, தூதுவளை, வல்லாரை, முருங்கை இலை, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை அல்லது பிற உணவுகளுடன் நினைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.



  தேர்ந்தெடுத்து உண்ணும் உணவால் தேகத்தில் உணர்வும், நம் உணர்வால் நல்ல சிந்தனையும் உண்டாகி, இதயம், மூளையும். குளிர்ச்சி அடைந்து, இந்த உடலை நீடிக்கிறது.


இப்பதிவில் நாம் இதயத்தை பேணிக்கும் முறையை சிறந்த அளவில் இருக்க எவ்வாறு அவற்றையும் நாம் கட்டுபடுத்த வேண்டும் என்பது தெளிவாக கண்டுவிட்டோம்.


 நீங்கள் தெரிவிக்கும் இருக்கும் கருத்துக்களை கண்டிப்பாக தெரிவிக்கலாம் இதன் மூலம் கூடுதலான தகவல்களை இருப்பினும் நீங்கள் அதையும் தெரிவிக்கலாம் அப்படி தெரிவிப்பதால் மற்றவர்களும் பயன் அடைவார்கள்.


Post a Comment

Previous Post Next Post